Monday, January 31, 2011


அவளுக்கு விடுமுறை ஏது?

பள்ளியறைகளிலும்
பல குழந்தை
படுத்தபடி பால் கேட்கும்.

துள்ளி வருகையிலும்
துளித் துளிய்யாய்
தீண்டிப் பெறுவதுண்டு.

உரசிச் செல்கையிலும்
ஒரு துளி
உண்டு பசியாறும்.

நடந்து போகையிலும்
நாவால்
நக்கிப் பசியடங்கும்.

No comments:

Post a Comment