தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும், ஈழத் தமிழர்களால் தங்களின் தேசியத் தலைவராக மதிக்கப்படுபவருமான வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் சடலம் எரிக்கப்பட்ட சிதையில் நாய்களை கொன்று போட்டு எரித்த சிறிலங்க இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை, சிறிலங்க அரசின், சிங்கள அரசியலின் இனவெறி முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
மறைந்த பார்வதி அம்மாளின் உறவினர்கள், சிதையில் இருக்கும் சாம்பலைக் கொண்டு இறுதிச் சடங்கை செய்ய வந்து பார்த்தபோது, அதில் கொல்லப்பட்ட நாய்களின் எரிந்த சடலங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றுள்ளனர். சிறிலங்க இராணுவத்தின் இந்த ஈனச் செயல் ஈழத் தமிழர்கள் மட்டுமின்றி, உலகத் தமிழர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
FILE
கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை பார்வதி அம்மாள் இறந்துவிட்ட செய்தி பரவியதும், யாழ்ப்பாணத்து மக்கள் அவருக்கு தங்களின் இறுதி அஞ்சலியை செலுத்த திரண்டபோது, அவர்களை சிறிலங்க இராணுவமும், காவல்துறையினரும் தடுத்துள்ளனர். மறுநாளும் பொது மக்கள் எவரும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படவில்லை.
இறுதி ஊர்வலத்தின் போதும் அதில் கலந்து கொள்ள வந்த மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கு கொந்தளிப்பான சூழல் உருவாகியுள்ளது. ஆயினும் இறுதி ஊர்வலம் அமைதியாக நடைபெறட்டும் என்பதால் மக்கள் அமைதி காத்துள்ளனர். யாழ் பல்கலை மாணவர்களும் அஞ்சலி செலுத்த முற்பட்டபோது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்தே தங்களின் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சத்தை சிதையில் நாய்களை கொன்று வீசி எரியச் செய்து வெளிப்படுத்தியுள்ளனர் சிறிலங்க இராணுவத்தினர்.
இந்த இழி செயலை சிறிலங்க அரசோ அல்லது அதிபர் மகிந்த ராஜபக்சவோ கண்டிக்கவும் இல்லை, கண்டுகொள்ளவும் இல்லை. இவர்தான் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்பட பாடுபடுவதாக கொழும்புவில் இருந்து பேசிக்கொண்டிருக்கின்றார்!
பார்வதி அம்மாளின் சிதையில் நாய்களைக் கொன்று போட்டதால் அவருக்கு எந்த அவமரியாதையும் ஏற்படப்போவதில்லை. இப்படிப்பட்ட நடவடிக்கையில் சிறிலங்க இராணுவம் ஈடுபடுவதும் முதல் முறையில்லை. தமிழருக்கு எதிரான இனப் படுகொலை போர் நடந்தபோது சிறிலங்க படையினருடன் நடந்து போரில் வீர மரணமடைந்த விடுதலைப் புலிகள் இயக்கதின் பெண் போராளிகளின் பிணத்தை புணர்ந்த ‘நாகரீக’ படையினர் அல்லவா சிறிலங்க இராணுவத்தினர். தாங்கள் புணர்ந்த பெண் போராளிகளின் படங்களை எடுத்து அதனை தங்களுக்குள் பரிமாறி மகிழ்ந்தவர்கள்தானே இந்தப் படையினர்!
போர்ப் படையோடு எந்த தொடர்பும் அற்ற ஊடகவியலாளரான இசைப் பிரியாவை வன்புணர்ச்சி செய்து...
No comments:
Post a Comment