முதல்வருக்கு தெரியலையே!அ.ஜெயராமன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: "இலவசங்கள்' மூலம் எந்தத் தேர்தலிலும் சுலபமாக வெற்றி பெற்று விடலாம் என்று தி.மு.க., எண்ணிக் கொண்டிருப்பதை, தமிழக மக்கள் அனைவருமே அறிவர்.இது குறித்து, வெளியாகி உள்ள ஒரு செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் நோக்கோடு, "பத்திரிகையோடு, இலவச இணைப்பை வழக்கமாக வழங்கும் நாளிதழுக்கு, அரசு வழங்கும் இலவச திட்டங்களை விமர்சிக்க அருகதை உண்டா?' என, வினா எழுப்பியுள்ளார் முதல்வர் கருணாநிதி.எதிர்க்கட்சிகள் எழுப்பும் எந்தவொரு விமர்சனத்திற்கும், புள்ளி விவரங்களோடும், மற்ற மாநிலங்களை ஒப்பீடு செய்தும், மறுப்புத் தெரிவிக்கும் கருணாநிதி, "தினமலர்' விஷயத்தில், தடுமாறி இருப்பது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது."தினமலர்' நாளிதழுடன் வெள்ளிக்கிழமைகளில் வழங்கப்படும், "சிறுவர் மலர்' சனிக்கிழமைகளில் அளிக்கப்படும், "ஆன்மிகமலர்' ஞாயிற்றுக் கிழமைகளில் தரப்படும், "வாரமலர்' திங்கள் கிழமைகளில் கொடுக்கப்படும், "கம்ப்யூட்டர் மலர்' ஆகிய எதுவுமே, இலவசம் அல்ல.செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில், "தினமலர்' நாளிதழின் விலை மூன்று ரூபாய். வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில், "தினமலர்' நாளிதழின் விலை நான்கு ரூபாய்.ஆக, சிறுவர் மலரோ, ஆன்மிக மலரோ, வாரமலரோ, கம்ப்யூட்டர் மலரோ, "இலவசங்கள்' அல்ல; அவைகளுக்கு விலை உண்டு.மேலும் அவைகள், "தினமலர்' நாளிதழுடன், "இணைப்பு' என்றுதான் குறிப்பிடப்படுகின்றனவே தவிர, "இலவச இணைப்பு' என்று, எங்கும், எப்போதும் குறிப்பிடப்படுவதில்லை. இது, "தினமலர்' வாசகர் அனைவருக்குமே நன்கு தெரியும்.வேறு சில பத்திரிகைகள் தான், இணைப்புகளுக்காக, கூடுதலாக காசையும் வாங்கி, "இலவச இணைப்பு' என்று விளம்பரப் படுத்துகின்றன. "தினமலர்' நாளிதழ் வழங்கும் அனைத்தும், இணைப்புகள்தானே தவிர, இலவசம் கிடையாது. எதையுமே கூர்ந்து கவனிக்கும் முதல்வர் கருணாநிதி, இலவசத்தில் இப்படி கோட்டை விட்டது, ஆச்சர்யமாக உள்ளது.
No comments:
Post a Comment