மக்கள் பணமும்குலநாசம்!என்.சிவசுந்தரபாரதி, காரைக்குடியிலிருந்து எழுதுகிறார்: தணிக்கைத் துறை அதிகாரியிடம் எம்.பி.,க்கள் கேள்வியும், ஆய்வும் எதற்கு? கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? இந்த இமாலயத் திருட்டு பற்றியும், பங்குதாரர்கள் யார் யார் என்பதும், இந்தியாவுக்கே தெரியும்போது, அப்பாவி கணக்குத் தணிக்கை அதிகாரியை குத்திக் கொல்வதால் என்ன பயன்?உச்சியே சரியில்லை, உள்ளங்கால் வி.ஏ.ஓ.,வை சித்ரவதை செய்து என்ன பயன்? ஜனாதிபதி, உண்மையிலேயே வாய்மை, தூய்மை, நேர்மை உள்ளவர் என்றால், பிரதமரை அழைத்து, ஜே.பி.சி.,க்கு அனுமதி தரச் சொல்லியிருப்பார். அவர் தன், அமைதி மூலம், நன்றிக் கடனைச் செலுத்துகிறார்.காங்கிரசின் உத்தரவுப்படித் தான், தேர்தல் கமிஷன், சி.பி.ஐ., சபாநாயகர் போன்றோர் நடப்பது தெளிவாகவே தெரிகிறது. பலமுறை, சுப்ரீம் கோர்ட்டால், சி.பி.ஐ., அவமானப்படுத்தப்பட்டும், அது திருந்தவில்லை. நிரா ராடியாவின் கமிஷனே, 60 கோடி ரூபாய் எனில், பங்குதாரர்களின் கொள்ளை எவ்வளவு?"<span st
No comments:
Post a Comment