ஒரு நாள் இரவில்
வாயிற்படி நெரிசலில்
யாருக்கோ சில்லறை உதவி
இறங்கி ஏறி தொங்கி வந்த இருள் பயணத்தில்
தொலைத்து விட்டேன்
உன் அன்பளிப்பை.
உன்னையே தொலைத்துவிட்டதாய்
வழி நெடுகப் பதறி
வீடு வந்தும் உறங்காமல்
விசையுந்தேறி
பதினைந்து கல் பயணித்து
வழியோரம் துழாவி
கண்டேன்..
கண்டேன் சீதையை என்பது போல்
கண்டேன்...
நெஞ்சொடு வைத்து
நிமிஷங்களாய் நெகிழ்ந்து
பத்திரமாய் ஏந்தி வந்து
இரவு முதிர்ந்த வேளையில்
என் வைப்பறையில் கொண்டுவந்து வைத்து
இன்று வரைக் காப்பாற்றி
எடுப்பதில்லை எதற்கும்...
என் மார்பிலும் மடியிலும்
வேறு எந்தப் பயனுக்கும் இன்றி
வாஞ்சையுட்ன் இருக்கும்
நீ தந்த
உன்
பழைய கைக்குட்டை
No comments:
Post a Comment