மதிப்பிற்குரிய அய்யா !
இந்த கருத்தை கூறுவதற்கு என்னை மன்னித்துவிடுங்கள் .இந்த மாணவர்கள் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் .ஆயக்கரன்புலத்தில் படித்த
நாட்கள் இன்னும் பசுமையாக என் நினைவில் உள்ளது .பத்தாம் வகுப்பிலும் பனிரெண்டாம் வகுப்பிலும் செம்மையாக தண்டனை தந்த ஆசிரியர்கள் இன்னும் நினைவில் உள்ளனர் .ஆனால் அன்று கோபப்பட்டது உண்மைதான் .ஆனால் தற்கொலைக்கு முயன்றதில்லை .மாறாக முடிந்த அளவு முயற்சித்தோம் .இன்று ஓரளவேனும் நிம்மதியாய் இருப்பதற்கு அதுவே காரணம் .
ஆனால் இன்றைய மாணவர்களிடம் எதுவும் சொல்ல முடியவில்லை .சின்ன விழயதுக்கும் கோபபடுகின்றனர்.இவர்கள் எப்படி வரும் போட்டி உலகத்தை சமாளிப்பர்.பொழுது போக்கு சினிமா விளையாட்டு இதற்கு செலவிடும் நேரமே அதிகம் .இது தவறென்று சொல்லவில்லை .நேரத்தின் மதிப்பை உணருங்கள் என்றே சொல்கிறேன் .
உதாரணதிற்கு ஒன்று ! இன்று முதல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆரம்பம் .நாளை உங்கள் மாணவரிடம் கேட்டு பாருங்கள் .இறுதியாண்டு தேர்வு நெருங்கி விட்டதே . என்ன செய்தாய் என்று ?
உங்கள் கருத்தை சொல்லுங்கள் நாளை சிந்திப்போம் !சிந்திப்போம் !!
No comments:
Post a Comment