உலக ஜாதிகளே ஒன்று கூடுங்கள்
உலக ஜாதிகளில் ஒன்று குறையுங்கள்
ஜாதிகள் ஒழிப்போம்
வாருங்கள் வாருங்கள்
எல்லா ஜாதிகளும்
உனக்கும் எனக்கும்
ஒரே உறவு
மொழி.
உனக்கும் எனக்கும்
ஒரே பகை
தமிழ்.
செந்தமிழில்
அரசாயன மாற்றம்..
செம்மொழி தமிழ்.
பன்னாட்டு பயண நிலையத்தில்
விலக்கப்பட்ட சொல்
தமிழன்.
புலிகளின் எண்ணிக்கை
குறைந்து விட்டதாம் -
இந்தியா கவலை.
மிருகக் காட்சி சாலையிலும்
காலியாயிருக்கிறது -
புலிக்கூண்டு.
மளிகைக் கடையில்
சி பி ஐ விசாரணை-
புலியா? புளியா?
அபயக் குரல் கேட்டுவிடாமல்
கொளுத்து
ஆயிரம் வாலா.
அவர்களுக்கு (ஈழத்தமிழர்களுக்கு)
அஞ்சலி செலுத்தினால்கூட
நீ வீரன்தான்.
புதிய அகராதி..
வீர விலங்கு -
நாய்.
வெற்றி விலங்கு-
நரி.
தோல்விகள்
ஞானம் தரும்.
நமக்கு மட்டும்
மரணம்.
கண்ணீர் விடட்டும்
கதறி அழட்டும் ...
காசாகிவிடும்
காகிதங்கள்.
கத்தரிக்காயும் விற்கும்
அப்படியே
துப்பாக்கியும் விற்கும்-
அண்டை நாடுகள்.
ஆன்டனிக்கும்
ஆண்டர்சனுக்கும்
இடையில் -
இந்தியா.
நூறு நாள் வேலை
ஒரு ரூபாய் அரிசி -
உனக்கென்ன கவலை.
மானாட மயிலாட
மதுக்கடையில் நீயாட -
வாழ்க ஜனநாயகம்.
உலக ஜாதிகளே ஒன்று கூடுங்கள்
உலக ஜாதிகளில் ஒன்று குறையுங்கள்.
அதன் பேர்
தமிழ்ச் சாதி!
No comments:
Post a Comment