தமாஷ்சீன்போடுங்களேன்!க.மோகன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தமிழக முதல்வர், தன் தள்ளாத வயதில் கூட, மூளையை கசக்கி யோசித்து, மக்களை மயக்கும் போதை திட்டங்களை, இலவசங்களை வழங்கி, மக்களையும், கட்சியையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். மக்களின் அத்தியாவசிய தேவையாகி போன, "டிவி'யை இலவசமாக கொடுத்து, அதையே தனக்கு கேன்வாஸ் செய்ய, இலவச விளம்பரமாக்கினார்.மக்களிடம், ஐந்து வருட காலம் அந்த போதை இருந்ததென்னவோ உண்மை தான். ஆனால், அந்த ஐந்து வருட முயற்சியையும் முறியடித்து, போதையை தெளிய வைத்துள்ளது, "2ஜி' ஸ்பெக்ட்ரம். குப்பனுக்கும், சுப்பனுக்கும், "2ஜி' ஸ்பெக்ட்ரம் பற்றி என்ன தெரியும் என்றெல்லாம் நினைக்க முடியாதபடி, இலவச "டிவி' மூலம், இந்த ஊழல் விஷயம், காட்டு தீ போல பரவியுள்ளது. ஊழல் நடந்தது, ஊருக்கே தெரிந்த நிலையில், பதவியில் இருக்கும் போதே, நான்கு முதல், ஐந்து மாதத்திற்குள், ஊழலே நடக்கவில்லை என நிரூபிப்பது இயலாத காரியம்.அது முடியாமல் போகும்போது, அதை திசை திருப்ப, அவசர கால நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் தி.மு.க.,வுக்கு உள்ளது. ஒரு சில திரைப்படத்தில், கிளைமாக்ஸ் மட்டும் செம காமெடியாகவோ, செம டிராஜடியாகவோ இருக்கும். தி.மு.க., தலைவரும், மற்ற அமைச்சர்களும், அடுத்து வரும் நாட்களில், அந்த கிளைமாக்சை அடுத்தடுத்து விடும் அறிக்கைகளிலும், சால்ஜாப்புகளிலும் இருந்து மாறி, ஒரு காமெடி சீனை அரங்கேற்றினால், சிரிக்கும் வாய்ப்பாவது மக்களுக்கு கிடைக்கும்.
No comments:
Post a Comment