மன்னிக்கமாட்டார்கள்மக்கள்!க.அருச்சுனன், செங்கல்பட்டிலிருந்து எழுதுகிறார்: "ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து விசாரிக்க, பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கக் கோரிய எதிர்க்கட்சிகளின் பார்லிமென்ட் முடக்க செயல்களை, மக்கள் மன்னிக்க மாட்டார்கள்' என்கிறார், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.எப்போதுமே, ஆளும்கட்சி, தனக்கு சாதகமாகத்தான் பேசும்; அதன் செயலும் அப்படியே இருக்கும்.எதிர்க்கட்சிகள் தான், ஆளும்கட்சியின் தவறை தட்டிக் கேட்கும். அப்படி செயல் ஆற்றுகின்றனரா என, மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். பார்லிமென்ட் முடக்கத்தால், மக்கள் வரிப் பணம் வீண் போனாலும் பரவாயில்லை; 1.76 லட்சம் கோடி பணம் அரசுக்கு வந்தால் நல்லது என, மக்கள் கருதுகின்றனர்.தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களுக்குத் தான், கூட்டம் கூடும். எனவே, எதிர்க்கட்சிகளின் செயலை மக்கள் ஆதரிக்கின்றனர்.ஊழல் முறைகேட்டை வெளிப்படுத்த, தெளிவுபடுத்த கோரும் எதிர்க்கட்சிகளை, மக்கள் வெறுக்க மாட்டார்கள். மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டியது எந்தக் கட்சி என்பதை, மக்கள் மன்றம் முடிவு செய்யும்.
ஊழல் செய்தவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்பதை, அரசியல்வாதிகள் உணர வேண்டும்.
No comments:
Post a Comment