Wednesday, February 2, 2011

சிறையில் நிலைமைமாற வேண்டும்:


சிறையில் நிலைமைமாற வேண்டும்: வே.முருகேசன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: நம் நாட்டில், சாதாரண மனிதன் திருடினால், சிறையில் அடைத்து, வெளுத்து வாங்குவர். லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்டால், தலையில் முக்காடு போட்டு, முகம் தெரியாமல் அவர்களை அழைத்துச் செல்வர். ஆனால், பெரும்புள்ளிகளோ, "நான் நிரபராதி என நிரூபிப்பேன்' என்று கூறி, பல வருடங்களாக காலத்தை தள்ளிக் கொண்டிருப்பர்.அது மட்டுமா... ஊழல் முறைகேட்டில் ஈடுபடும் பெரும் புள்ளிகளுக்கு, சிறையிலும் முதல் வகுப்பு. எப்படி திருந்துவர்? இவர்களையும் சாதாரண கைதிகளைப் போல நடத்தினால் என்ன?வி.வி.ஐ.பி.,க்கள் என்றால், சொல்லவே வேண்டியதில்லை; நம் நாட்டின் இதுபோன்ற நிலைமை வேண்டும்.




இவர்ஒருவரேபோதும்!திருமலைராஜன், ராஜகீழ்பாக்கம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஸ்பெக்ட்ரம் ஊழலிலிருந்து ராஜாவை காப்பாற்ற, தி.மு.க.,வை விட, பிரணாப் முகர்ஜி ரொம்பவும் பிரயத்தனப்படுவது, கேள்விக்குரியாக உள்ளது. இப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவரை நிதியமைச்சராகப் பெற்றிருப்பது, "நம் பாக்கியமே!'"பா.ஜ., 2004ல் காட்டிய வழிகாட்டுதல்படி தான் ராஜா செயல்பட்டிருக்கிறார். 1998ம் ஆண்டிலேயே, 1.45 லட்சம் கோடி ரூபாய் பா.ஜ.,வால் நஷ்டம் ஏற்பட்டது' என்று அவர் கூறியிருக்கிறார்.இவருடைய பேச்சு, வெறும் வாதத்திற்கு வைப்பது போல் இருக்கிறதே தவிர, செறிவுடையதாக இல்லை.பிரணாப் இப்படியே பேசிக் கொண்டிருந்தால், இவர் ஒருவரே போதும், காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணியை தோல்வி காணச் செய்ய. ஒருவர் தட்டிக்கொடுக்க, மற்றவர் அணைத்துச் செல்ல... ராஜா, ராஜா தான்!

No comments:

Post a Comment