எதிர்க்கட்சிகளுக்குஅழகு எது?ஜூலி வில்சன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: "தேசத்தின் மண்வாசனை தெரியாதவர் ராகுல்' என்ற இல.கணேசனின் பேட்டியை படித்தேன்... "சிறப்பாக' உள்ளது.அன்னிய நாட்டில் பிறப்பைப் பெற்ற அத்வானி எல்லாம், என்னமாய் தேசப்பற்றுக் கொண்டிருக்கிறார்; இந்திய மண்ணில், அயோத்தியில், பாபர் மசூதி இடித்து புண்ணியம் தேடிக் கொண்டவர்கள் தான், "தேசம், மண் வாசனை' என்று பேசுகின்றனர்.என்னமோ இவர்களின் ஆட்சியில் ஊழலே இல்லாதது போல், இப்படியொரு நாடகம். எல்லாம் தேர்தலை முன் வைத்து தான் நடக்கிறது.போராட்டம், உண்ணாவிரதம் என்பதால், எல்லா விதத்திலும் இந்த தேசத்தின் மண்ணிற்கு எத்தனை நஷ்டம், பொது சொத்து நாசம் என்பதெல்லாம் இந்த கட்சித் தலைவர்களுக்கு என்று தான் உறைக்கப் போகிறதோ?முதலில் ஒரு விரலை சுட்டிக்காட்டும் போது, மற்ற நான்கு விரல்கள் தங்களை நோக்கி உள்ளது என்பதை உணரத்தான் வேண்டும்.நாட்டிற்கு பங்கம் வராமல், மத்திய அரசோடு ஒன்றிணைந்து, ஊழலை ஒழிக்க பாடுபடுவதே எதிர்க்கட்சிகளுக்கு அழகு.
No comments:
Post a Comment